Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை எஞ்ஜீனியருக்கு கொரோனா?? – தீவிர சிகிச்சை!

Webdunia
ஞாயிறு, 15 மார்ச் 2020 (15:43 IST)
பிரேசிலில் இருந்து சென்னை வந்த சாஃப்ட்வேர் எஞ்ஜீனியருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வரும் பயணிகள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் இன்று பிரேசிலில் இருந்து துபாய் வழியாக சென்னை வந்த சாஃப்ட்வேர் எஞ்ஜீனியர் ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ரத்த மாதிரிகளின் முடிவிற்கு பிறகே அவருக்கு கொரோனா இருக்கிறதா என்பது உறுதிப்படுத்தப்படும். இந்நிலையில் தமிழக எல்லை பகுதிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments