தூத்துக்குடியில் முன்பகை காரணமாக இளம்பெண்ணை முதியவர் ஒருவர் துரத்தி துரத்தி அரிவாளால் வெட்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் உள்ள சுந்தர்நகரை சேர்ந்தவர் நிஷாந்த். இவரது இளம் மணைவி சிந்துஜா. இவர்களது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் கந்தசாமி என்ற 91 வயது முதியவர் வசித்து வருகிறார். கந்தசாமி வளர்த்து வரும் வாழைமரங்கள் காம்பவுண்ட் சுவர் தாண்டி வளர்ந்துள்ளதால் இலைகள், நிஷாந்த் வீட்டில் விழுவதாக ஏற்கனவே இரு வீட்டாரிடையே வாக்குவாதம், சண்டை இருந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் வாழை இலைகள் வெட்டப்பட்டிருப்பதை கண்ட கந்தசாமி, அதை நிஷாந்த் வீட்டினர் வெட்டியதாக கோபத்தில் காலங்காத்தாலேயே அரிவாளைத் தூக்கிக் கொண்டு சென்றுள்ளார். காலையில் வீட்டுவாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த நிஷாந்தின் மனைவி சிந்துஜாவை அரிவாளால் வெட்டத் தொடங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிந்துஜா உதவிக்கேட்டு கத்திக் கொண்டே சாலையில் ஓடியுள்ளார். கந்தசாமி அப்போதும் சிந்துஜாவை அரிவாளோடு துரத்திக் கொண்டு சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த சிந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கந்தசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாழை மர பிரச்சினைக்காக கந்தசாமி இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K