Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது எப்போது?

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (12:02 IST)
தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என தகவல். 

 
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்ரறை ஆண்டு காலமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த சூழலில் கடந்த 1 ஆம் தேதி முதலாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
 
இதனைடையே இன்று மாலை 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் மேலும் தெரிவித்துள்ளதாவது... 
 
தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது குறித்து நாளை முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும். இதன் பின்னர் அவர் இது குறித்து முடிவெடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காணாமல் போன ‘அன்னாபெல்’ பேய் பொம்மை.. அடுத்தடுத்து நடக்கும் துர் சம்பவங்கள்! - பீதியில் உறைந்த மக்கள்!

ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்த ஈபிஎஸ்! முதல்வர் முக ஸ்டாலின்

இடியை கண்டாலும் பயம் இல்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச்சென்றது ஏன்? ஈபிஎஸ் கேள்வி

பாகிஸ்தானை ஓட ஓட விரட்டிய ராக்கெட் லாஞ்சர்கள்.. இந்தியாவிடம் ஆர்டர் கொடுத்த இஸ்ரேல்..!

கனமழை எச்சரிக்கை: சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை! - வனத்துறை உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments