Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு 8 வழிச்சாலை குறித்து என்ன தெரியும்? அன்புமணி ராமதாஸ்

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2018 (10:43 IST)
சென்னை-சேலம் எட்டு வழிச்சாலையை அதிமுக, பாஜக தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் எதிர்த்து வருகின்றன. அதேபோல் விவசாய நிலத்தை இழக்கும் பொதுமக்களும் இந்த திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தபோது எட்டு வழிச்சாலைக்கு தனது ஆதரவை தெரிவித்தார். இந்த சாலையால் தொழில்வளம் பெருகும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் அவர் தனது கருத்தை கூறினார். ரஜினி என்ன சொன்னாலும் எதிர்த்து வரும் ஒருசிலர் இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் பாமக 30-ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி, ரஜினியின் இந்த கருத்துக்கு தனது கண்டனத்தை பதிவு செய்தார். ரஜினி என்ன சொன்னாலும் ஊடகங்கள் தலைப்பு செய்தியாக்கிவிடுவதாகவும், எட்டு வழிச்சாலை குறித்து ரஜினிக்கு என்ன தெரியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 
 
ஆனால் அதே நேரத்தில் ரஜினியின் இந்த கருத்துக்கு பல ஊடகங்கள் டுவிட்டரில் கருத்துக்கணிப்பை எடுத்தபோது ரஜினியின் கருத்துக்கு ஆதரவாக சுமார் 50% வாக்குகள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments