Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவின் லட்சுமண ரேகையை மீறினால்… அண்ணாமலை எச்சரிக்கை!

Webdunia
புதன், 23 நவம்பர் 2022 (16:06 IST)
கட்சியில் களை எடுக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. வரும் காலத்தில் இது தொடரும் என அண்ணாமலை பேட்டி.


பாஜகவின் பொறுப்புகளிலிருந்து காயத்ரி ரகுராம் ஆறுமாத காலத்திற்கு நீக்கப்பட்ட நிலையில் சூர்யா சிவா பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதித்து அண்ணாமலை உத்தரவு போட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

பாஜகவின் பெண் நிர்வாகியை சூர்யா சிவா மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர் பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதித்து அண்ணாமலை உத்தரவு பிறப்பித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒழுங்கு நடவடிக்கை குழு தனது அறிக்கை சமர்ப்பிக்கும் வரை ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

ஒரே நாளில் காயத்ரி ரகுராம் மற்றும் சூர்யா சிவா ஆகிய இருவர் மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது அக்காட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது,

பாஜக நாகரிகமான அரசியல் செய்து வருகிறது. எனவே பாஜகவின் லட்சுமண ரேகையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. யாரையும் விடப்போவதில்லை. கட்சியில் களை எடுக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. வரும் காலத்தில் இது தொடரும். தற்போதைய நடவடிக்கை ஆரம்ப கட்டம் தான். பாஜகவில் இன்னும் பல அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்..

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments