Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், மக்கள் தீர்ப்பை தலைவணங்கி வரவேற்கிறோம்: அண்ணாமலை

Webdunia
வியாழன், 2 மார்ச் 2023 (15:34 IST)
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த போது ஈரோடு கிழக்கு தேர்தல் மக்கள் முடிவை நாங்கள் தலைவணங்கி ஏற்கிறோம் என்று தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து சில நாட்கள் குழப்பமான சூழல் இருந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் மௌனம் கலைத்த பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்திருந்தார். இருப்பினும் அவர் ஒரு சில நாட்கள் மட்டுமே பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ள நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
ஒருவேளை இந்த தேர்தலில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிட்டு இருந்தால் கடும் சவாலாக இருந்திருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments