மதுரையின் விளையாட்டு வீரர்களின் தேவை கருதி தமிழக அரசு 8.25 கோடி செலவில் செயற்கை நூழிலை ஓடுபாதையும், புல்தரை கால்பந்தாட்ட மைதானம் அமைக்க ஆணை பிறப்பித்ததது என்று கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு. வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது;
''எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் செயற்கை நூலிழை ஓடுபாதை அமைக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலானதால் அதை மாற்ற வேண்டுமென்று கடிதம் எழுதி தொடர்ந்து வலியுறுத்தினோம் .
மதுரையின் விளையாட்டு வீரர்களின் தேவை கருதி தமிழக அரசு 8.25 கோடி செலவில் செயற்கை நூழிலை ஓடுபாதையும், புல்தரை கால்பந்தாட்ட மைதானம் அமைக்க ஆணை பிறப்பித்தது.
அந்தப் பணிகளின் துவக்கவிழா நிகழ்வில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் திரு பி.மூர்த்தி அவர்களோடு பங்கேற்றேன். உடன் சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மரியாதைக்குரிய மேயர் இந்திராணி பொன்வசந்த், துணைமேயர் நாகராஜன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா இஆப உள்ளிட்டோர் '' என்று தெரிவித்துள்ளார்