Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (20:51 IST)
தமிழகத்தில் சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா கால  ஊரடங்கில் 3 விதத்தில் பிரிக்கப்பட்ட மாவட்டங்களை ஒன்றாக்கி தளர்வுகள் தர அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும், தற்போது கொரோனா முழுவதுமாகக் குறைந்து வருவதால்,   அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிப்பதாக அரசு அறிவித்துள்ளது.

 கடந்த சில வாரங்களாக அதிகளவு கொரோனா தொற்றுக் காணப்பட்ட கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா தொற்றுக் குறைந்துள்ளதால் விரைவில் தமிழக அரசு கூடுதல் தளர்வுகள் அளித்துள்ளது.

இதுகுறித்து  அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் தொழில்ர் சார்ந்த பொருட்காட்சி நிகழ்ச்சிகள் நடத்தலாம்,   ஆனால் இதில் பங்கேற்கும் அரங்கு உரிமையாளர், பணியாளர்கள், கட்டாயம், ஆரிடிபிசி ஆர் பரிசொதனை அல்லது இரண்டு தவணைகளில் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இனி இ -பாஸ் முறை ரத்து செய்யப்படுகிறது.

திரையரங்குகள் நீச்சல் குளங்களுக்கு தடை தொடரும், டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும், ஓட்டல்கள், டீ கடைகளில் 50% வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடலாம் எனவும், தமிழகத்திலுள்ள அனைத்து துணிக்கடைகள், நகைக்கடைகள் காற்றோட்ட வசதியுடன் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம் எனவும்,  வணிக வளாகங்கள் அனைத்தும் காலை 9 மணி முதல் காலை 8 மணி வரை செயல்படலாம் என அரசு அறிவித்துள்ளது.

அதேபோல் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் அரசு நெறிமுறைகளின்படி மக்கள் செயல்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழக அரசின் இந்த அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் மீது அவதூறு கருத்து: இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு..!

ஆளுனரை சந்திக்கின்றாரா விஜய்? ஊழல் பட்டியலை கொடுக்கவிருப்பதாக தகவல்..!

இன்றிரவு தான் ஆட்டமே இருக்குது: சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன்..!

சென்னையில் கனமழை எச்சரிக்கை: கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு

ராகுல் காந்தி குடும்பமே இடஒதுக்கீட்டுக்கு எதிரானது: பிரதமா் மோடி குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments