Publish Date: Tue, 25 Aug 2026 (12:55 IST)
Updated Date: Tue, 25 Aug 2026 (12:56 IST)
முதல்வர் ஜோசப் விஜய் பற்றி மிகவும் அவதூறாக பேசுபவர்களை தவெக அரசு தொடர்ந்து கைது செய்து வருகிறது. ஏற்கனவே திமுக எம்.எல்.ஏக்கள் மார்க்கண்டேயன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் மார்க்கண்டேயன் பல நாட்கள் சிறையிலும் இருந்தார்.
அதேபோல் நடிகையுடன் இணைத்து முதல்வர் விஜயை நக்கலாக பேசியதால் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை போலீசார் கைது செய்து தஞ்சாவூர் வரை அழைத்து சென்று விசாரணை செய்துவிட்டு இரவுதான் அவரை விடுதலை செய்தனர். அதேநேரம் அப்பாவை காணோம் என பேசுகிறார்கள்.. வீட்டிற்கு போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யாரென தெரியும் என முதல்வர் விஜய் பற்றி மிகவும் அவதூறாக பேசிய நயினார் நாகேந்திரன் கைது செய்யப்படவில்லை
இதையடுத்து உதயநிதியை கைது செய்யும் தவெக ஏன் நயினார் நாகேந்திரனை கைது செய்யவில்லை.. பாஜகவுக்கும், தவெகவுகும் இடையே ஒரு உறவு இருக்கிறது என்று திமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்..
இந்நிலையில், ஒரு வார இதழில் இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ் எங்களுக்கு எந்த பயமும் இல்லை.. பாஜகவை நாங்கள் ஒரு கட்சியாகவே கருதவில்லை.. உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர்.. அவருக்கென பொறுப்பு இருக்கிறது.. அதை அவர் மீறியதால் நடவடிக்கை எடுத்தோம்.. நயினார் நாகேந்திரனை கைது செய்தால் அதை வைத்து அவர்கள் அரசியல் செய்வார்கள்.. மதவாத அரசியலை தமிழகத்தில் வளர்ப்பதற்கு நாங்கள் உதவி செய்தது போல் ஆகிவிடும். அதை கருத்தில் கொண்டுதான் அவரை கைது செய்யவில்லை எனக் கூறியிருக்கிறார்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க