Daily Horoscope
✕

ஏர்செல் அலுவலகம் மீது தாக்குதல் - சேவை முடங்கியதால் ஆத்திரம்

Webdunia
வியாழன், 22 பிப்ரவரி 2018 (14:30 IST)
சேவை முடங்கியதோடு, அலுவலகத்தையும் பூட்டி சென்றாதால் ஏர்செல் அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் ஏர்செல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த நெட்வொர்க்கை பயன்படுத்துபவர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. அதேபோல், வேறு நெட்வொர்க் பயன்படுத்துபவர்களால், ஏர்செல்லை பயன்படுத்துபவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. அதனால், வாடிக்கையாளர்கள் பெரும் அவதி அடைந்தனர். அதோடு, ஏர்செல் நெட்வொர்க் இனிமேல் இயங்காது என்ற செய்தியும் பரவியது.
 
ஆனால், தொழில் நுட்ப பிரச்சனை காரணமாக தற்காலிகமாக சேவை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஓரிரு நாட்களில் சரியாகி விடும் என ஏர்செல் நிறுவனம் சார்பில் நேற்று கூறப்பட்டது.
 
இந்நிலையில், இன்று சென்னை அருகே உள்ள தாம்பரத்தில் உள்ள ஒரு ஏர்செல் சேவை மையத்தின் முன்பு இன்று காலை பலர் திரண்டனர். அப்போது அலுவகம் பூட்டப்பட்டது. எனவே, கோபமடைந்த சிலர் கற்களை கொண்டு தாக்கினர். இதில், அலுவகத்தின் பெயர் பலகை, பேனர்கள் கிழிந்து தொங்கின. அதன் பின் அங்கு போலீசார் சென்று அவர்களை கலைய செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாராபுரம், மதுராந்தகம் எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு.. தவெக பலம் 109...

ரேசன் கடைகளில் வெங்காயம் விற்பனை.. ஒரு கிலோ ரூ.35 மட்டுமே..

சவுதி அரேபியாவின் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல்.. ஹூதி அமைப்புக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை?

உச்சநீதிமன்ற நீதிபதியை சந்திக்க ஊர்வலமாக செல்ல திட்டம்.. இந்தியா கூட்டணி தலைவர்களின் அடுத்த மூவ்..

விமான நிலையம் - கிளாம்பாக்கம் உள்பட 3 மெட்ரோ வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை...

அடுத்த கட்டுரையில்
Show comments