Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்...

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (15:55 IST)
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே, நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை புதுவை மீனவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பம் மீனவர் குப்பத்தில் வசிக்கும் மீனவர்கள் சிலர்  நேற்று அதிகாலையில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

கடற்கரையில் இருந்து சுமமார் 10 கிமீ தூரத்தில் ஆழ்கடல் பகுதியில் காலை 6 மணிக்கு அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது,  புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் அப்பகுதிக்கு வந்தனர்.

அப்போது, தமிழக மீனவர்கள் மீது பைப்புகள், மரத்தடிகள் எடுத்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, தமிழக மீனவர்கள் கேள்வி எழுப்பியதற்கு, மீன்பிடி வலைகளை அறுத்துவிட்டதால்தான் அடிப்பதாகக் கூறியுள்ளனர். இதில், எக்கியர் குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மற்ற மீனவர்கள் 3 க்கும் மேற்ப்பட்ட பைபர் படகுகளில் சென்று பாதிக்கப்பட்டவர்களை கரைக்கு மீட்டு வந்தனர்.

இந்த சம்பவம் பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

7000 mAh பவர் பேட்டரி.. வாடிக்கையான அம்சங்கள்..! - OPPO K13 5G எப்படி?

அடுத்த 5 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்: வெய்யில் கொளுத்தும்: வானிலை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments