Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்; பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது!

Advertiesment
Cricket
இந்தியா – இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் போட்டி எதிர்வரும் பிப்ரவரி 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில் முதல் டெஸ்ட் ஆட்டம் 5ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இங்கிலாந்திலிருந்து முன்கூட்டியே வரும் கிரிக்கெட் வீரர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட உள்ளனர்.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளை காண பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது கொரோனா தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 வயது குழந்தை வன்கொடுமை; 29 நாட்களில் தூக்கு தண்டனை! – உத்தரபிரதேசத்தில் அதிரடி!