Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்ட அய்யாக்கண்ணு..! எதற்காக தெரியுமா.?

Senthil Velan
சனி, 1 ஜூன் 2024 (14:37 IST)
மோடியை கண்டித்து கன்னியாகுமரியில் போராட்டம் நடத்தப்போவதாக வெளியான தகவலை அடுத்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை போலீசார் வீட்டு காவலில் சிறை வைத்துள்ளனர்.
 
மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்,  விவசாயிகளின் வேளாண் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்.
 
இந்நிலையில் தியானம் இருக்கும் நரேந்திர மோடியை கண்டித்து கன்னியாகுமரியில் போராட்டம் நடத்த  அய்யாக்கண்ணு புறப்பட்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 
 
இதையடுத்து திருச்சி மலர் சாலை அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள வீட்டில் அய்யாக்கண்ணுவை போலீசார் சிறை வைத்துள்ளனர். மேலும் வீட்டிலிருந்து வெளியில் வர விடாமல் வீட்டு காவலில் அடைத்து வைத்துள்ளனர். 

ALSO READ: வீசும் வெப்ப அலை.! இனி கோடையில் தேர்தல் வேண்டாம்..! தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கோரிக்கை..!!
 
மேலும் அந்த பகுதியில் 20-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போர் நிறுத்தம் செய்தி எதிரொலி: சுமார் 2000 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

இந்திரா காந்தி பண்ணுனது வேற.. மோடி கரெக்ட்டான ரூட்ல போயிட்டிருக்கார்!? - காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கருத்து!

ரூ.100 கோடி நில மோசடி விவகாரம்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சம்மன்..!

ஆன்லைனில் 5 லட்ச ரூபாய்க்கு கோகைன் ஆர்டர் செய்த பெண் டாக்டர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

இந்தியாவுக்குள்ள ‘கராச்சி’ பேக்கரியா? அடித்து துவம்சம் செய்த கும்பல்! - ஐதராபாத்தில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments