Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்பர் 5ல் அமைதிப்பேரணி: அழகிரியின் திட்டம் என்ன?

Webdunia
புதன், 22 ஆகஸ்ட் 2018 (07:50 IST)
திமுக தலைவராக வரும் 28ஆம் தேதி மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மு.க.அழகிரி வரும் செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் அமைதிப்பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார்.
 
மு.க.அழகிரியின் இந்த அமைதிப்பேரணி அறிவிப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவில் உள்ள அதிருப்தியாளர்களும், திமுக உடைய வேண்டும் என்று கனவு காணும் அரசியல் கட்சிகளும் இந்த அமைதிப்பேரணிக்கு மறைமுக ஆதரவு கொடுப்பார்கள் என்று கூறப்படுகிறது
 
சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாசிலையில் இருந்து காலை பத்து மணிக்கு தொடங்கி கருணாநிதி நினைவிடம் வரை செல்லும் இந்த பேரணியில், சுமார் ஒரு லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். 
 
மேலும், கருணாநிதியின் உண்மையான தொண்டர்கள் தம் பக்கம் இருக்கிறார்கள் என்பதை இந்த அமைதி பேரணி மூலம் நிரூபித்து காட்டப்போவதாக மு.க. அழகிரி சூளுரைத்துள்ளார். இந்த பேரணியின் முடிவில் மு.க.அழகிரி சில அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments