Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வை யாராலும் ரத்து செய்ய முடியாது… பாலகுருசாமி உறுதி!

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (08:50 IST)
நீட் தேர்வை இனிமேல் யாராலும் ரத்து செய்ய முடியாது என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தராக இருந்தவர் பாலகுருசாமி. இவர் நீட் தேர்வு உள்ளிட்ட பலவற்றைப் பற்றி சர்ச்சையான கருத்துகளை கூறிவருபவர். இந்நிலையில் நீட் தேர்வை இனிமேல் யாராலும் ரத்து செய்ய முடியாது என அவர் கூறியுள்ளார். புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிதான் ஆட்சிக்கு வந்துள்ளது.

இந்நிலையில் பாலகுருசாமி ‘மாணவர்கள் நீட்டுக்கு முன்னர் பல்வேறு தேர்வுகளுக்கு தயாராகி வந்தனர். இப்போது ஒரே தேர்வு என்பதால் அவர்களின் நேரம் மிச்சம் ஆகியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகளில் ஒன்றாக நுழைவுத் தேர்வு உள்ளது. இந்த தேர்வு மூலம் தமிழக மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. மேலும் அது இட ஒதுக்கீட்டையோ, சமூக நீதியையோ பாதிக்கவில்லை.  நாட்டிலேயே நீட் தேர்வை தமிழ்நாடு மட்டுமே எதிர்ப்பது விசித்திரமாக உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. எனவே மாணவர்கள் தேர்வுக்கு உறுதியாக தயாராக வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments