Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சென்னையில் ஆகஸ்ட் 9 வரை இதற்கு தடை: அதிரடி அறிவிப்பு!

சென்னையில் ஆகஸ்ட் 9 வரை இதற்கு தடை: அதிரடி அறிவிப்பு!
, ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (13:25 IST)
சென்னையில் ஆகஸ்ட் 9 வரை இதற்கு தடை: அதிரடி அறிவிப்பு!
சென்னையில் ஆகஸ்டு 9 வரை உள் அரங்கங்கள் மற்றும் வெளி அரங்கங்களில் கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாக சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது
 
சென்னை பெருநகர காவல்‌ ஆணையாளர்‌ சங்கர்‌ ஜிவால்‌, இ.கா.ப, ஆகிய நான்‌, 31.7.2021 நாளிட்ட எண்‌. 491, வருவாய்‌ மற்றும்‌ பேறழிவு மேலாண்மை துறை அரசு ஆணையில்‌, கொரோனா நோய்‌ தடுப்பு நடவடிக்கைகளை மேலும்‌ தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின்‌ அடிப்படையில்‌, 31.7.2021 அன்று முதல்‌ 09.08.2021 அன்று காலை 6.00 மணி வரை ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளை தவிர கூடுதலாக எவ்வித தளர்வுகளுமின்றி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதை கருத்திற்‌ கொண்டு, சென்னை பெருநகர காவல்‌ எல்லைக்குட்பட்ட பொது இடங்களில்‌, உள்‌ அரங்கங்கள்‌ மற்றும்‌ திறந்த
வெளியில்‌ குழுமுதல்‌ / கூட்டங்கள்‌ நடத்துதலை தடை செய்தல்‌ அவசியம்‌ எனக்‌ கருதுகிறேன்‌:
 
எனவே,சென்னை நகர காவல்‌ சட்டம்‌, 1888 (1888 ஆம்‌ ஆண்டின்‌ தமிழ்நாடு சட்டம்‌ 11) பிரிவு 47 உட்பிரிவு (2) அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைக்‌ கொண்டு, சென்னை பெருநகர காவல்‌ ஆணையாளர்‌ சங்கர்‌ ஜிவால்‌, இ.கா.ப, ஆகிய நான்‌, பொதுமக்களின்‌ நலன்‌ கருதி, சென்னை பெருநகர காவல்‌ எல்லைக்குட்பட்ட பொது இடங்களில்‌, திறந்த வெளியில்‌ குழுமுதல்‌ / கூட்டங்கள்‌ நடத்துதலை, 34.7.2021 அன்று பிற்பகல்‌ 3.00 மணி முதல்‌ 09.08.2021 அன்று பிற்பகல்‌ 3.00 மணி வரை, ஒரு நாட்கள்‌ உட்பட, தடை விதித்து ஆணையிடுகிறேன்‌.
 
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிகரிக்கும் கொரோனா; ஆபத்தில் 46 மாவட்டங்கள்! – மத்திய அரசு எச்சரிக்கை!