Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை

Webdunia
செவ்வாய், 5 அக்டோபர் 2021 (15:01 IST)
தற்போது ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இந்த 9 மாவட்டங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு. 
 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ளது. அதேசமயம் மற்ற 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பகுதிகளில் இடைதேர்தலும் நடத்தப்படுகிறது. 
 
இந்நிலையில் தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இன்று 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் பொது விடுமுறையை தமிழக அரசு அறிவித்தது. இதனைத்தொடர்ந்து வேலூர், ராணிப்பேட்டை. திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் நான்கு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 
 
இதனோடு தற்போது ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இந்த 9 மாவட்டங்களில் உள்ள வங்கிகளுக்கு நாளை (6 ஆம் தேதி) மற்றும் 9 ஆம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர் குழுமம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மு.க,ஸ்டாலின், விஜய்!

இன்று மாலை பவள விழா.. முப்பெரும் விழாவில் உங்களை காணக் காத்திருக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்

இந்திய எல்லைக்குள் படகில் வந்த 3 இலங்கையர்கள் கைது.. அகதிகளா? கொள்ளையர்களா?

தமிழகத்தில் இன்று 7 டிகிரி வரை வெப்பநிலை உயரும்.. வானிலை ஆய்வு மையத்தின் அதிர்ச்சி தகவல்..!

திமுக அரசின் சமூக அநீதிக்கு வயது 900 நாட்கள்: உயிரை கொடுத்தாவது மீட்டெடுப்பேன்! டாக்டர் ராமதாஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments