Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக 400ஐ தொட வாய்ப்பில்லை.. இந்தியா கூட்டணிக்கு 100 கூட கிடையாது: கருத்துக்கணிப்பு

Mahendran
வியாழன், 7 மார்ச் 2024 (12:30 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றும் அதேபோல் 100 தொகுதிகளையும் கூட இந்தியா கூட்டணி வெற்றி பெறாது என்றும் இந்தியா டிவி கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது

வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பல நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன

அதில் இந்தியா டிவி மற்றும் சிஎன்எக்ஸ் இணைந்து எடுத்த கருத்துக்கணிப்பில் மொத்தமுள்ள 543 இடங்களில் 378 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்றும் இந்தியா கூட்டணிக்கு 98 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியா கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி இல்லாமல் இருக்கும் சில கட்சிகள் 50 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும் என்று இந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது

கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் இந்த தேர்தலில் பாஜக மட்டும் தனித்து 335 இடங்களில் வெற்றி பெறும் என்றும் குறிப்பாக குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளையும் பாஜகவை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது

பீகார், ஜார்கண்ட், ஒடிசா போன்ற இடங்களில் பாஜக நல்ல வெற்றி பெறும் என்றும் மகாராஷ்டிரா மேற்கு வங்கத்திலும் பாஜக பெரும்பாலான இடங்களை கைப்பற்றும் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு நான்கு தொகுதிகள் கிடைக்கும் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments