Publish Date: Tue, 22 Feb 2022 (16:03 IST)
Updated Date: Tue, 22 Feb 2022 (16:05 IST)
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
பெரும்பாலான பகுதியை இந்த தேர்தலில் திமுக கைப்பற்றியுள்ள நிலையில் வழக்கம்போல அதிமுக இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் சில வேட்பாளர்கள் சொற்ப வாக்குகள் வாங்கியிருப்பது இணையத்தில் வெளியாகி அவர்கள் கேலி செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை மாநகராட்சி 133 ஆவது வார்டில் பாஜக சார்பாக போட்டியிட்ட உமா ஆனந்தன் வெறும் 8 வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு கூட்டத்தில் பேசியபோது கோட்சேவை ஆதரித்து பேசியதால் கடுமையான கண்டனங்களுக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.