அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் உள்பட இனிவரும் தேர்தல்களில் பாஜக தனித்து போட்டியிட இருப்பதாகவும் இது குறித்து ஆலோசனை நடைபெற்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
சென்னை தி நகரில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்தில் நேற்று கூடிய பாஜகவின் மைய குழு கூட்டத்தில் தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு பெருகி வருவதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்று பெரும்பாலான நிர்வாகிகள் கருத்துக் கூறினர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்தும், திமுக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்துவது குறித்தும் நேற்று ஆலோசனை செய்யப்பட்டது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற ஆலோசனையை டெல்லியை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி இருப்பதாகவும் டெல்லியின் உத்தரவு வந்த பின்னர் இது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது
எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்