Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துவிட்ட பாஜக- துரை வைகோ

Sinoj
வெள்ளி, 22 மார்ச் 2024 (19:36 IST)
மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் அது ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிரானதாக இருக்கும் என்று மதிமுக வேட்பாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார். அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இந்தியா கூட்டணியில் திமுக  இடம்பெற்றுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திமுக கூட்டணி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.
 
திருச்சி திமுக கூட்டனி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மதிமுக வேட்பாலர் துரை வைகோ, ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துவிட்ட பாஜகவை வீழ்த்த சிறந்த கூட்டணியை முதலமைச்சர் உருவாக்கித் தந்துள்ளார்.
 
ஒன்றிய அரசின்  ஒத்துழைப்பு இல்லாமலேயே  பல சிறப்பு வாய்ந்த திட்டங்களை தமிழ் நாட்டில்   நிறைவேற்றியுள்ளார். மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் அது ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிரானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில், காங்கிரஸ்,மதிமுக,கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. சமீபத்தில் தொகுதிப் பங்கீடுகளும் இறுதியாகி, திமுக தேர்தல் அறிக்கை வெளியான நிலையில், இன்று அக்கட்சியின் பிரசார பாடலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூரியனார் கோவில் ஆதீனம் திருமண சர்ச்சை - மடத்தில் இருந்து வெளியேறியது ஏன்?

மருத்துவர் தாக்குதல் எதிரொலி: அரசு மருத்துவமனைகளில் புதிய கட்டுப்பாடு..!

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தா பிரச்சினை இல்ல.. தேர்தலில் போட்டியிடலாம்! - சட்டத்தை மாற்றிய சந்திரபாபு நாயுடு!

உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? உடனே இதை செய்யுங்கள்.. ஏஆர் ரஹ்மானின் பதிவு..!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி.. என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments