Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வி பயத்தில் பிரதமர் மோடிக்குத்தான் தூக்கம் வரவில்லை- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Sinoj
வெள்ளி, 22 மார்ச் 2024 (19:29 IST)
தோல்வி பயத்தில் அவருக்குத்தான் தூக்கம் வரவில்லை என்று  திருச்சி திமுக கூட்டணி பிரசாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
 
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார்.
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இந்தியா கூட்டணியில் திமுக  இடம்பெற்றுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திமுக கூட்டணி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.
 
 திருச்சி திமுக கூட்டணி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
 
திருச்சி என்றாலே திமுகதான், திருச்சியில் தொடங்கும் பாதை எப்போதும் வெற்றிப்பாதைத்தான். திமுகவினருக்கு தூக்கம் வரவில்லை என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். தோல்வி பயத்தில் அவருக்குத்தான் தூக்கம் வரவில்லை என்று பேசினார்.
 
மேலும் கடும் நிதி நெருக்கடியில் கூட திமுக அரசு, 3 ஆண்டுகளில் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. ஆனால் ஒன்றிய அரசு வெள்ள நிவாரணம் கூட தர மறுக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா? முடியாது: உச்சநீதிமன்றம்

சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. இனி சீமான் ஆட்டத்தை பாப்பீங்க..! தேர்தலில் தனித்து போட்டி! - சீமான் அறிவிப்பு!

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments