Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுச் சொத்துகளை சேதப்படுத்தினால் சுட வேண்டும் - பாஜக தலைவர்

Webdunia
திங்கள், 13 ஜனவரி 2020 (14:15 IST)
கடந்த ஆண்டு மத்திய பாஜக அரசால் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம்  (CCA) நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எதிர்கட்சிகள், பல்கலை, கல்லூரி மாணவர்கள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின்போது பொதுச் சொத்துக்களை சிலர் சேதப்படுத்தினர். இந்நிலையில், மேற்குவங்க பாஜக தலைவர் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினால் சுடுவோம் எனப் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டில் CCA வுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தலைமையில்  அம்மாநிலத்தில் பிரமாண்ட பேரணி ஒன்றை நடத்தினார். அங்கு சிலர் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியதாக தெரிகிறது.
 
 இந்நிலையில், CCA க்கு ஆதரவு தெரிவித்து, மேற்கு வங்க மாநிலம் அதியா என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ்  கலந்து கொண்டு பேசினார்.
 
அப்பொது அவர் கூறியதாவது : மேற்கு வங்கத்தில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் மீது மமதா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுச் சொத்துகளை யாராவது சேதப்படுத்தினால் சுட்டு வீழத்துவோம் என பேசியுள்ளார். இவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments