Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைர மோதிரம் கொள்ளை: பாஜக இளைஞர் அணி செயலாளர் கைது!

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (15:07 IST)
கோவை சரவணம்பட்டி, ரெவீன்யூ நகரை சேர்ந்தவர் ஜான்சன். இவர் பாஜக சிறுபான்மை பிரிவு கோவை மாவட்ட தலைவராக உள்ளார்.


கடந்த மாதம் 10 ம் தேதி இவர் தனது மகன் டேவிட் பிறந்த நாளுக்காக கோவை ரேஸ்கோர்சில் கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அங்கு நடந்த ஜோடிகள் நடன நிகழ்ச்சியை பார்க்க ரூ.2,500 பணம் கட்டினார். அப்போது அங்கிருந்த கணக்காளர் விஷ்ணு பாரதி ஜோடியாக வருபவர்கள் மட்டும் இதில் பங்கு கொள்ள முடியும் என்று கூறி அனுமதி மறுத்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது இதில் ஆத்திரமடைந்த

விஷ்ணு பாரதி மற்றும் அங்கு தங்கி இருந்த ஓட்டல் பவுன்சர்கள் சேர்ந்து ஜான்சனையும் அவரது மகன் டேவிட்டையும் சரமரியாக தாக்கினர். இதில் ஜான்சன் மகன் டேவிட்டையும் சரமரியாக தாக்கினர். இதில் ஜான்சன் மகன் டேவிட் பல் உடைந்தது. அவர் அணிந்திருந்த வைர மோதிரம் கொள்ளை அடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும். டேவிட் படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் பா.ஜ.க சிறுபான்மை பிரிவு தலைவர் ஜான்சன் ஒட்டலில் தாக்கப்பட்ட வீடியோ வைரலாக பரவியது.

இந்த வழக்கு தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி, திருப்பூர் எஸ்.ஆர்.வி கார்டனைச் சேர்ந்த ஓட்டல் கணக்காளர் விஷ்ணு பாரதி, ஓட்டல் பவுன்சர்கள் ரெயின்போ ரமேஷ், பில்லா ரமேஷ், ரஞ்சித், சுதர்சன், முகமது அப்ரிதீன் ஆகியோர் மீது கொலை முயற்சி, வழிப்பறி, தாக்குதல் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த ரெயின்போ ரமேஷ் கைது செய்யப்பட்டார். இவர் கோவை மாவட்டம் பா.ஜ.க இளைஞர் அணி செயலாளராக, உள்ளார். இவரை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

 Edited By: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பா.ஜ.க-வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!

வயநாடு இடைத்தேர்தல்.. இன்றுடன் பிரச்சாரம் முடிவு.. ராகுல் - பிரியங்கா தீவிரம்..!

இது வெறும் டிரைலர் தான்.. சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஈபிஎஸ் உடன் விவாதத்திற்கு நான் தயார்: துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு..!

மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல்: டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம்

அடுத்த கட்டுரையில்
Show comments