Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக 370 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பே இல்லை.. பிரசாந்த் கிஷோர் திட்டவட்டம்..!

பிரசாந்த் கிஷோர்
Siva
செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (12:22 IST)
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 370 முதல் 400 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்று சில கருத்துக்கணிப்புகள் தெரிவித்து வருகிறது என்பதும் பாஜக தலைவர்களே அவ்வாறுதான் பேட்டி அளித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்

ஆனால் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பாஜக 370 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்றும் கூட்டணியாக கூட அந்த அளவுக்கு தொகுதிகள் வருவது சந்தேகம் தான் என்றும் தெரிவித்துள்ளார்

ஆனால் அதே நேரத்தில் மீண்டும் பாஜக தான் தேசிய அளவில் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கூட்டணி கட்சிகளுடன் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்

இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இல்லாததால் போதுமான அளவில் போட்டி இல்லை என்றும் தமிழ்நாடு உள்பட ஒரு சில மாநிலங்களில் மட்டுமே இந்தியா கூட்டணிக்கு நல்ல வெற்றி கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்

மொத்தத்தில் பாஜக கூட்டணி 370 தொகுதிகளை பிடிக்காது என்றாலும் அந்த கட்சி தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments