Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ரஃபேல் ஊழல் பற்றிய புத்தகத்திற்கு தடை – எல்லை மீறுகிறதா காவல்துறை ?

ரஃபேல் ஊழல் பற்றிய புத்தகத்திற்கு தடை – எல்லை மீறுகிறதா காவல்துறை ?
, செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (16:53 IST)
ரபேல் ஊழல் பற்றிய புத்தகம் ஒன்றினை வெளியிட தடை விதித்து புத்தகங்களை அள்ளிச்சென்றுள்ளது தமிழகக் காவல்துறை.

ரஃபேல் ஊழல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாட்டையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்குப் பரபரப்பாக பேசப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செல்லும் கூட்டங்களில் எல்லாம் ரஃபேல் ஊழல் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் கடுமையான விமர்சனங்களை வைத்தார். ஆனால் பாஜகவும் மோடியும் ரபேல் விமான ஒப்பந்தத்தில் எவ்விதமான விதிமுறை மீறலோ அல்லது ஊழலோ நடைபெறவில்லை என மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில் எஸ் விஜயன் எழுதிய ’நாட்டை உலுக்கும் ரஃபேல் ஊழல்’ எனும் புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று நடக்க இருந்தது. ஆனால் சம்மந்தப்பட்ட புத்தகத்தை வெளியிட இருந்த பாரதி புத்தாகலய கடைக்கு சென்ற தமிழகக் காவல்துறையினர் புத்தக வெளியீட்டு நிகழ்வு நடைபெறக் கூடாது எனவும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை அள்ளிச்சென்றும் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்த காரணம் கேட்கப்பட்டபோது ‘தேர்தல் நேரத்தில் இந்த புத்தகம் வெளியாவது விதிமுறைகளுக்கு உட்பட்டதல்ல’ எனத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதே சமயம் தேர்தலுக்கு ஒரு வாரம் முன்னராக மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான நரேந்தர மோடி பி.எம். எனும் திரைப்படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொடனியிலேயே போட்டுத்தாக்கிய எலி: தெறித்து ஓடிய பாம்பு!!!