Publish Date: Mon, 08 Jun 2026 (11:27 IST)
Updated Date: Mon, 08 Jun 2026 (11:30 IST)
தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் முக்கியமான ஹார்ட் டிஸ்க்குகள் திருடு போய்விட்டதாக சமீபத்தில் அமைச்சர் சி.டி.நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர்.
திருடப்பட்ட அந்த ஹார்ட் டிஸ்க்குகளில் பல ரகசியமான கோப்புகள் இருப்பதாக போலீசார் கூறி வருகிறார்கள். இதை விமர்சித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தவெக யாரைக் காப்பாற்ற இதையெல்லாம் செய்கிறது?.. இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றெல்லாம் கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. எனவே யாருக்கெல்லாம் இதில் தொடர்புள்ளது? என்ன காரணத்திற்காக ஹார்ட் டிஸ்க்கை திருடினார்கள்? என அவர்கள் தீவிர விசாரணை நடத்தவிருக்கிறார்கள்.