Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: சிபிசிஐடி எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (20:56 IST)
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: சிபிசிஐடி எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக தனி நபரோ அல்லது நிறுவனமோ புலன்விசாரணை செய்ய கூடாது என சிபிசிஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது
 
கள்ளக்குறிச்சி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து தற்போது சிபிசிஐடி இதுகுறித்து விசாரணை செய்து வருகிறது 
இந்த நிலையில் தனியார் நிறுவனங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என்ற போர்வையில் இந்த மாணவியின் மரணம் குறித்து தனிப்பட்ட முறையில் புலன் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக யாரும் விசாரணை செய்யக் கூடாது என்றும் அவ்வாறு விசாரணை செய்து இணையதளங்களில் அல்லது யூடியூப் சேனலில் பதிவு செய்தால் அந்த சேனல்கள் மூடப்படும் என்றும் சிபிசிஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது 
 
மேலும் இவ்வழக்கில் ஏதேனும் தகவல் கிடைத்தால் சிபிசிஐடி அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments