Daily Horoscope

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதையெல்லாம் ஃபாலோ பண்ணனும்!.. தனியார் டிவி சேனல்களுக்கு மத்திய அரசு கெடுபிடி!..

Advertiesment
tv channel
நாடெங்கும் உள்ள பொது மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்ப்பதில் தொலைக்காட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் உண்மையான செய்திகளை வெளியிட்டாலும் பல தனியார் தொலைக்காட்சிகள் சித்தரிக்கப்பட்ட அல்லது மிகைப்படுத்தப்பட்ட பொய்யான தகவல்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன.

சில தவறுகள் காரணமாகவும் அது நடந்துவிடுகிறது.  தொலைக்காட்சிகளில் வரும் சில பொய்யான மற்றும் கற்பனையான, யூகங்களின் அடிப்படையில் சொல்லப்படும் செய்திகளை பொதுமக்கள் நம்புவதால் நாட்டில் குழப்பமும் ஏற்படுகிறது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கு கடுமையான எச்சரிக்கையுடன் கூடிய புதிய வழிகாட்டுதல்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தற்போது வெளியிட்டிருக்கிறது.

தொலைக்காட்சிகளில் கிராபிக்ஸ் மற்றும் மெய்நிகர் செய்தி வழங்குபவர்கள் AI பயன்படுத்தும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்..

குற்ற சம்பவங்கள் மற்றும் விபத்துக்களை திரும்பத் திரும்ப ஒளிபரப்புவது வன்முறை Glorify செய்யும் விதமாக சித்தரிப்பது போன்றவற்றிற்கு தடை.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செய்திகளை வெளியிடும்போது மிகுந்த கவனமும் பொறுப்புணர்வும் தேவை..

பாதுகாப்பு படையினர் மேற்கொள்ளும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது நேரலை ஒளிபரப்பு செய்யக்கூடாது.

கேபிள் தொலைக்காட்சி ஒழுங்குமுறை சட்டம் 1995-ன் கீழ் ஒளிபரப்பு குறியீட்டை மீறும் சேனல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எல். முருகன் ராஜினாமா செய்ததால் காலியான ராஜ்யசபா எம்பி பதவி.. தேர்தல் தேதி அறிவிப்பு..