Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புயல் நின்றும் விடாத மழை; 8 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
புதன், 6 டிசம்பர் 2023 (09:35 IST)
தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக பல இடங்களில் மழை பெய்து வந்த நிலையில் புயல் கரையை கடந்த பின்னும் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னையை தாண்டி கரையை கடந்த நிலையில் பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் மேலும் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழையும் பெய்து வந்தது.

தற்போது புயல் கரையை கடந்துவிட்ட நிலையிலும் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய கடலோர மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமர் புராண கதாப்பாத்திரமா? இந்துக்களை அவமதிக்கிறார் ராகுல்காந்தி! - பாஜக கண்டனம்!

அமெரிக்காவுக்கு வெளியே படம் எடுத்தால் 100 சதவீதம் வரி! - ட்ரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஹாலிவுட்!

ஐபிஎல் பார்த்தேன்! வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக ஆடினார்! - புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!

7 மாவட்டங்களில் குளிர்விக்க வரும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

திமுக பொதுக் கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்கம்பம்.. நூலிழையில் உயிர் தப்பித்த ஆ ராசா..!

அடுத்த கட்டுரையில்
Show comments