Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மு.க.ஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு: மெகா கூட்டணிக்கு அச்சாரமா?

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2018 (08:50 IST)
ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, பாஜகவுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்த நிலையில் நேற்று மதசார்பற்ற ஜனதாதள தலைவர் தேவேகவுடா மற்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமியையும் சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசவுள்ள சந்திரபாபு நாயுடு, பாஜகவுக்கு எதிரான மதச்சார்பற்ற மெகா கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று மாலை 6 மணிக்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெறும் இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி அமைப்பது, அந்த கூட்டணியில் எந்தெந்த கட்சியை இணைப்பது என்பது குறித்து ஆலோசனை செய்யவுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments