''சந்திரயான் 3 வெற்றி'': இஸ்ரோவுக்கு வாழ்த்துக் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (18:34 IST)
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இன்று விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையில் இறங்கி சாதனை படைத்துள்ளது.

சந்திரன் பற்றிய ஆராய்ச்சியில் இதற்கு முன்னதாக உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்து, இந்தியா, சந்திரயான் 1, சந்திரயான் 2 ஆகிய விண்கலங்களை  நிலவுக்கு அனுப்பி அங்கு நீர் உள்ளதாக கண்டறிந்தது.

இதையடுத்து, சமீபத்தில் சந்திரயான் – 3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பிய நிலையில், விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்காக வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.

இன்று மாலை  விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவது குறித்த நேரலை ஒளிபரப்பு 5.44 மணி முதல்  தொடங்க உள்ளதாக இஸ்ரோ அறிவித்தது.

அதேபோல், சந்திராயான் 3 லேண்டரை நிலவில் தரையிறக்கும் செயல்முறையில் இஸ்ரோ வெற்றிகரமாகச் செயல்பட்டு,  விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கிச் சாதனை படைத்தது.

இதனால் ஒட்டுமொத்த இந்தியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இஸ்ரோவுக்கு வாழ்த்துகள் கூறியுள்ளார்.

தன் டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:  ‘’வாழ்த்துகள் இஸ்ரோ. சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. சந்திரனின் மேற்பரப்பை தொட்ட 4 வது பெரிய நாடாக இந்தியா சாதனை படைத்துள்ளது.  அயராத முயற்சி மற்றும் புதுமைக்காக உழைத்த குழுவிற்கும்  பாராட்டுகள்… இந்தியா விண்வெளி ஆய்வில் ஒரு  மாபெரும் பாய்ச்சல்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

தீபத்திருநாள் வாழ்த்து கூறிய போஸ்டை திடீரென நீக்கிய செங்கோட்டையன்.. மீண்டும் பதிவு செய்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments