Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சில முக்கிய ரயில்கள் இனி எழும்பூரில் இருந்து கிளம்பாது: தெற்கு ரயில்வே அறிவிப்பு.. முழு விவரங்கள்..

Advertiesment
சென்னை எழும்பூர்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக சில எக்ஸ்பிரஸ் மற்றும் புகர் ரயில்களின் நேரங்கள் மற்றும் இயக்கப்படும் இடங்களில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
 
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, எழும்பூரிலிருந்து இயக்கப்படும் சில விரைவு ரயில்கள் தாம்பரம், மாம்பலம் மற்றும் சென்னை கடற்கரை ஆகிய நிலையங்களிலிருந்து புறப்படும் அல்லது அங்கே இயக்கப்படும்.
 
 உதாரணமாக, மன்னார்குடி - சென்னை எழும்பூர் விரைவு ரயில் தாம்பரத்தில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து இயக்கப்படவுள்ளது. மேலும், திருச்சி - சென்னை எழும்பூர் ராக்ஃபோர்ட் அதிவிரைவு ரயில் மற்றும் சேலம் - சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயில் உள்ளிட்ட முக்கிய ரயில்களின் இயக்கத்திலும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
குறிப்பிட்ட தேதிகளில் தாம்பரம், மாம்பலம் பகுதிகளில் உழவன் விரைவு ரயில் போன்ற சேவைகள் சில நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை மாற்றியமைத்துக் கொள்ளுமாறும், ரயில்களின் நேர அட்டவணையை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ளுமாறும் ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு சுகர்!... வேதனையா இருக்கு!.. சட்டசபையில் ஓபிஎஸ் வைத்த கோரிக்கை!...