Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓங்கி அடிச்சா...புகார் கொடுக்க வந்தவரை கன்னத்தில் அறைந்த ’ இன்ஸ் ’! வைரல் வீடியோ

Advertiesment
police station
, புதன், 19 ஜூன் 2019 (13:37 IST)
காவல்துறை உங்கள் நண்பன் என்பது பெயரளவுக்குத் தான் போலும். சமீபகாலமாகவே காவல்நிலையங்களில் புகார் கொடுக்க சென்றால் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை என்று தகவல் வெளியாகிறது. 

மட்டுமின்றி வெளியிடங்களில் போலீஸாரின் மக்களை தரக்குறைவாக தாக்கிப் பேசுவதும் , அடிப்பதும்  தலை தூக்கியுள்ளதாகவும் லஞ்சம் , லாவண்யம் பெருக்கெடுத்துள்ளதாகவும் அவ்வப்பொழுது செய்திகளில் வெளியாகின்றது.
 
இந்நிலையில் புகார் கொடுப்பதற்க்காக ஒருவர் காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்த ஏட்டு எதையே படித்துக்கொண்டு உள்ளாரே தவிர..புகார் கொடுக்க வந்தவரின் குரலைக் காதுக்கொடுத்துக் கேட்கவில்லை, சிறுது நேரம் கழித்துதான் ஏட்டி அவரை ஏறெடுத்துப் பார்த்து விஷயத்தைக் கேட்டுள்ளார்.
police station
அப்போது உள்ளிருந்து ஏட்டு இடத்திற்கு சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் வரும் போது, ஏட்டு எழுந்து நின்றார். புகார் கொடுக்க வந்தவர் தன் பைக்கை காணவில்லை என்று புகார் கொடுக்க வந்துள்ளதாகச் சொல்ல... அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் அவரை கெட்ட வார்த்தைகளால் திட்டி , பளார் என்று கன்னத்தில் அடித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில்  வைரலாகிவருகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடிகாரன்னா கேவலமா போச்சா? டாஸ்மாக்-கில் எலிக்கறி சப்ளையால் கொந்தளிப்பு!