Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லேடீஸ் ஹாஸ்டலில் ஹிட்டன் கேமரா: காமுகன் சிக்கியது எப்படி?

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2018 (16:23 IST)
சென்னை ஆதம்பாக்கம் தில்லை நகர் முதல் தெருவில் உள்ள லேடீஸ் ஹாஸ்டல் ஒன்றில் குளியல் அறை போன்ற இடங்களில் ஹிட்டன் கேமரா பொருத்தப்பட்டிருந்தது குறித்த செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில், இந்த விஷயத்தில் கேமரா வைத்திருப்பது எப்படி கண்டறியப்பட்டது அந்த காமுகன் எப்படி சிக்கினான் என்ற தகவல் கிடைத்துள்ளது. சம்பத்ராஜ் திருச்சியில் இருந்து சென்னை வந்தவர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வீட்டை ஹாஸ்டலாக மாற்றி அதை இரண்டு மாதங்களாக நடத்தி வருகிறார். 
 
குறிப்பிட்ட நாளில், பாத்ரூமிலுள்ள பிளக் சாக்கெட்டில், ஹாஸ்டலில் தங்கியிந்த பெண் ஒருவர் ஹேர்டிரையர் பிளக்கை சொருக முயற்சித்துள்ளார். ஆனால், பிளக் செய்ய முடியவில்லை. இதனால், சாக்கெட்டை கழற்றி சரி செய்ய முயன்றுள்ளார். அப்போதுதான் கேமரா இருப்பது தெரியவந்துள்ளது. 
மேலும், ஹாஸ்டல் ரூமில் மொத்தம் ஆறு கேமராக்களை கண்டுபிடித்தனர். இதன் பின்னர் பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சம்பத்ராஜ் கைது செய்யப்பட்டார் என தகவ்ல் வெளியாகியுள்ளது. 
 
இன்னும் சிலர், விடுதியில் அவ்வப்போது சீரமைப்பு பணிகள் நடந்து வந்ததால் ரூமில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருக்குமோ என  சந்தேகித்து மொபைலில் ஹிட்டன் கேமரா டிடக்டர் செயலியை பதிவேற்றம் செய்து சோதனை செய்ததில் இந்த விவகாரம் தெரிய வந்தது எனவும் செய்திகள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவி! இந்திய தொழிலதிபர் கைது! - உ.பியில் பரபரப்பு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது எப்போது? தெற்கு ரயில்வே தகவல்..!

அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரான டாஸ்மாக் துணை மேலாளர்.. தீவிர விசாரணை..!

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments