Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அண்ணா சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (07:23 IST)
சென்னை அண்ணா சாலையில் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் சோதனை முறையாக போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் அண்ணாசாலையில் வாகனங்கள் எளிதாக செல்ல வேண்டி கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது. 1. ஸ்மித் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. அண்ணா சாலை x ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை செல்லலாம். ஒயிட்ஸ் சாலை x ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்து அண்ணா சாலை செல்ல அனுமதி இல்லை.

2. பட்டுல்லாஸ் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. ஒயிட்ஸ் சாலை X பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் இருந்து அண்ணா சாலை செல்லலாம். அண்ணா சாலை x பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை செல்ல அனுமதி இல்லை.

3. ஜி.பி.ரோடு சந்திப்பு மற்றும் பின்னி சாலையில் இருந்து அண்ணா சாலை வந்து ஒயிட்ஸ் ரோடு நோக்கி செல்லும் வாகனங்கள் பட்டுல்லாஸ் சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை. நேராக ஸ்மித் ரோடு சந்திப்பு சென்று இடது புறம் திரும்பி ஸ்மித் ரோடு, ஒயிட்ஸ் ரோடு சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

4.ராயப்பேட்டை மணிக்கூண்டு சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் ரோட்டில் வந்து அண்ணா சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பட்டுல்லாஸ் சாலை, அண்ணா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம். ஸ்மித் ரோடு வழியாக செல்ல அனுமதி இல்லை.

5.திரு.வி.க. x ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் ரோட்டில் வந்து அண்ணா சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்மித் ரோடு வழியாக செல்ல அனுமதி இல்லை. நேராக பட்டுல்லாஸ் சாலை சந்திப்பு சென்று இடது புறம் திரும்பி பட்டுல்லாஸ் சாலை. அண்ணா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

6. அண்ணாசாலை X பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் இருந்து பின்னிசாலை மற்றும் பிராட்வே நோக்கி செல்லும் வாகனங்கள் இடது புறமாக திரும்பி அண்ணா சாலையில் ஸ்பென்சர் எதிர்புறம் உள்ளே U வளைவில் திரும்பி பின்னி சாலை மற்றும் பிராட்வே நோக்கி செல்லலாம். வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு போக்குவரத்து காவல்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பா.ஜ.க-வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!

வயநாடு இடைத்தேர்தல்.. இன்றுடன் பிரச்சாரம் முடிவு.. ராகுல் - பிரியங்கா தீவிரம்..!

இது வெறும் டிரைலர் தான்.. சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஈபிஎஸ் உடன் விவாதத்திற்கு நான் தயார்: துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு..!

மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல்: டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம்

அடுத்த கட்டுரையில்
Show comments