Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து மாஸ்க் அணிந்தால் கொரோனா குறையும்! – சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்!

Webdunia
வியாழன், 4 ஜூன் 2020 (13:32 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதாக கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக ஐந்து கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தமிழகம் முழுவதிலும் தற்போதைய நிலவரப்படி 25,872 ஆக உள்ளது. இதில் தலைநகரான சென்னையில் மட்டும் 17,598 பாதிப்புகள் பதிவாகி உள்ளன.

இந்நிலையில் சென்னை நிலவரம் குறித்து பேசியுள்ள கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் சென்னையில் கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைவதாக தெரிவித்துள்ளார். மக்கள் தொடர்ந்து மாஸ்க் அணிந்து வந்ததால் பரவல் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், இந்தியாவில் இறப்பு சதவீதத்தை குறைக்க வேண்டும் என்றும், மக்கள் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மாஸ்க் அணிவதை தொடர்ந்து பின்பற்றினால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவி! இந்திய தொழிலதிபர் கைது! - உ.பியில் பரபரப்பு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது எப்போது? தெற்கு ரயில்வே தகவல்..!

அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரான டாஸ்மாக் துணை மேலாளர்.. தீவிர விசாரணை..!

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments