Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 நாட்கள் கனமழை, மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2022 (16:05 IST)
தமிழகத்தில் பல பகுதிகளில் 5 நாட்கள் கனமழை பெய்யும் என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வெள்ளி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு தினங்களும் தமிழ்நாடு பு புதுவையில் பரவலான பகுதியில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் இலங்கையை ஒட்டிய கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசும் என்பதால் அந்த பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடே கண்ணீரில் மூழ்கி இருக்க எடப்பாடி பழனிச்சாமி விருந்து வைப்பதா? மருது அழகுராஜ் கண்டனம்..!

பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கப்படும்.. அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆவேசம்..!

மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர்: வேலூரில் அதிர்ச்சி சம்பவம்..!

மையோனைஸுக்கு ஓராண்டு தடை: தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை..!

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments