Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை ஆய்வு மையம்

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2023 (14:39 IST)
தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கடுமையாக இருந்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை முதல் லேசான மழை வர பெய்து வருகிறது.
 
இந்த நிலையில் இன்று ஏற்கனவே மூன்று மாவட்டங்களில் தமிழகத்தில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் காலை தெரிவித்த நிலையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று அறிவித்துள்ளது. 
 
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே லேசான மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இருப்பினும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை தான் நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments