Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 7 பேருந்துகளின் வழித்தட எண்கள் மாற்றம்.. முழு விவரங்கள்..!

Siva
வியாழன், 1 மே 2025 (09:38 IST)
சென்னை மாநகரப் பேருந்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பயணிகள் வசதிக்காக தற்போதுள்ள சில பேருந்து வழித்தட எண்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய அமைப்பின்படி, ஏழு பேருந்து வழித்தடங்களின் எண்கள் மாற்றப்பட்டு  இயக்கப்படவுள்ளன. இந்த மாற்றங்கள் மே 1  அதாவது இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.

இதன்படி, மாதவரம் - தாம்பரம் செல்லும் 121எஃப் என்ற வழித்தடம் இனிமேல் 170ஏ என மாற்றப்பட்டுள்ளது.

அதேபோல், கவியரசு கண்ணதாசன் நகர் - தாம்பரம் பஸ்சின் எண் 121எச் இப்போதும் 170டி என அழைக்கப்படும்.

ஐயப்பன்தாங்கல் - பிராட்வே செல்லும் 11ஜிஇடி பஸ், இனிமேல் 11எம் என மாற்றப்பட்டுள்ளது.

பிராட்வே - கிளாம்பாக்கம் செல்லும் 18ஏஎக்ஸ் பஸ்சின் எண் 18ஏ ஆகவும், திருவான்மியூர் - கிளாம்பாக்கம் வழித்தடம் 91கே இப்போதும் 91 ஆகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பூந்தமல்லி - கூடுவாஞ்சேரி வழியில் இயக்கப்படும் 66எக்ஸ் பஸ் இப்போது 66பிஎக்ஸ் என்ற எண்ணுடன் இயங்கும்.

மேலும், கவியரசு கண்ணதாசன் நகர் - கிளாம்பாக்கம் செல்லும் 121எச் இடி என்ற பஸ், 170டி.எக்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இம்மாற்றங்கள் பயணிகளுக்கு தெளிவும், வசதியும் அளிக்கும் வகையில் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments