Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதோ கூடிட்டாங்கள்ல.. சென்னையில் அலைமோதும் கூட்டம்!

Webdunia
சனி, 25 ஏப்ரல் 2020 (12:02 IST)
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முழுமையான ஊரடங்கு செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. மதுரை, சேலம் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் இரண்டு நாட்கள் கடும் ஊரடங்கு அமல்படுத்த உள்ள நிலையில், சென்னையில் அடுத்த நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நான்கு நாட்கள் முழு ஊரடங்கு என்பதால் மக்கள் பொருட்களை வாங்க கூடுவர் என்பதால் இன்று மாநகராட்சிகளில் பொருட்கள் வாங்குவதற்கான நேரம் 3 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கி செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், அதை காற்றில் பறக்கவிட்டவாறு மக்கள் முட்டு மோதிக் கொண்டு கூட்டமாக பொருட்கள் வாங்குவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகமான மக்கள் கூட்டத்தால் போலீஸாரும் மக்களை அதிக இடங்களில் கட்டுப்படுத்த இயலவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments