Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹோலி பண்டிகை விடுமுறை: சென்னை-நாகா்கோவில் சிறப்பு ரயில்.. முன்பதிவு எப்போது?

Siva
வெள்ளி, 8 மார்ச் 2024 (07:23 IST)
ஹோலி பண்டிகை விடுமுறையை ஒட்டி சென்னை முதல் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் இந்த ரயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் போலி பண்டிகை மார்ச் 25ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்குவது வழக்கமான ஒன்று என்பது தெரிந்தது. அந்த வகையில் ஹோலி பண்டிகை சிறப்பு ரயிலாக  நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு கேரளா வழியாக சிறப்பு ரயில்களை இயக்கப்பட உள்ளன

 நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மார்ச் 10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் அதேபோல் மறு மார்க்கமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மார்ச் 11, 18, 25 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த ரயில்  நாகர்கோவில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.10 மணிக்கு சென்னை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக சென்னை சென்ட்ரல் வந்தடையும் என்றும் இந்த ரயிலுக்கு இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரண்ட் ஷாக் வைத்து மீன்பிடிக்க முயற்சி! மின்சாரத்தில் சிக்கி இளைஞர்கள் பலி!

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ரேஞ்சர்.. விசாரணையில் திடுக் தகவல்..!

3 வயது குழந்தைக்கு ஆன்மீக சிகிச்சை.. பரிதாபமாக உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த சிஆா்பிஎஃப் வீரர் விசாரணையின்றி டிஸ்மிஸ்.. பெரும் பரபரப்பு..!

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments