Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில்: தேதி அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (11:04 IST)
சென்னை சென்ட்ரல் மற்றும் திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் விரைவில் இயக்கப்பட விருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது ஜூலை 7ஆம் தேதி முதல் இந்த ரயில் இயக்கப்பட இருப்பதாகவும் பிரதமர் மோடி காணொளி மூலம் இந்த ரயிலை தொடங்கி வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையிலான வந்தே பாரத் ரயில் ஜோலார்பேட்டையில் நின்று செல்லும் வகையில் பயணத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
மேலும் சென்னை - நெல்லை வந்தே பாரத் படுக்கை வசதியுடன் கூடிய ரயிலாக இயக்க வாய்ப்பு உள்ளது என்றும் ஆனால் அதே நேரத்தில் சென்னை சென்ட்ரல் திருப்பதி இடையிலான வந்தே பார்த் ரயிலில் அமர்ந்து செல்லும் இருக்கைகள் கொண்ட ரயிலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 
 
சென்னை - திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவது பக்தர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments