Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போடுவதில் சாதனை படைத்த சென்னை!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (09:00 IST)
நாட்டின் 5 பெரிய நகரங்களில் சென்னையில் மட்டும் 2 ஆம் தவணை தடுப்பூசி அதிகம் செலுத்தப்பட்டுள்ளது என தகவல். 

 
தமிழகத்தில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதும் நேற்று 2 ஆயிரத்துக்கும் குறைவான பொதுமக்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவதற்கு தடுப்பு ஊசி செலுத்தப்படுவதும் ஒரு காரணம். ஆனால் அதே நேரத்தில் தடுப்பூசி பற்றாக்குறை அவ்வப்போது ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசு தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி அளிக்க வேண்டுமென கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கையின் அடிப்படையில் தற்போது தமிழகத்திற்கு கூடுதலாக 5 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனிடையே நாட்டின் 5 பெரிய நகரங்களில் சென்னையில் மட்டும் 2 ஆம் தவணை தடுப்பூசி அதிகம் செலுத்தப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் 11%, பெங்களூரு 10%, டெல்லி மற்றும் மும்பையில் தலா 7% பேருக்கு 2 ஆம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments