Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை விசாரணை கைதி மரணம்; 13 இடங்களில் காயம்! – வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை!

Webdunia
புதன், 4 மே 2022 (19:32 IST)
சென்னை காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்கள் முன்னதாக விசாரணைக்காக காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்ட விக்னேஷ் என்ற கைதி உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் தாக்கியதாலேயே விக்னேஷ் உயிரிழந்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதனிடையே காவல் நிலையத்தில் இருந்து தப்பியோட முயலும் விக்னேசை போலீஸ் பிடிப்பது போன்ற சிசிடிவி காட்சிகளும் வெளியாகின.

இந்நிலையில் தற்போது விசாரணை கைதி விக்னேஷின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

விக்னேசின் உடலில் லத்தியால் தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள், தலை, கண், உடலில் ரத்தம் கட்டிய காயங்கள், இடது கை, முதுகின் வலது பக்கம் காயம், வலது முன்னங்காலில் எலும்பு முறிவு ஆகியவை கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்.. பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவல்..!

கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.100 கோடியில் பூங்கா: தமிழக சுற்றுலா துறை தகவல்..!

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மிக கனமழை: வானிலை எச்சரிக்கை..!

2 பேர் உயிருடன் எரித்து கொலை.. 9 பேர் மாயம்.. மணிப்பூரில் மீண்டும் பதட்டம்..!

தமிழகத்தில் விடிய விடிய மழை.. 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments