கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகரங்களில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக சென்னை சுற்றியுள்ள ஏரிகள் மிக வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்த நிலையில் செம்பரப்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை எட்டி உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலை 8 மணி முதல் வினாடிக்கு 200 கன அடி உபரிநீர் திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வினாடிக்கு 1330 கன அடி நீர் வரத்து உள்ளதால் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் 310 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருப்பதால் உபரிநீர் திறக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதேபோல் புழல் ஏரி உபரி நீர் திறப்பு 300 கன அடியாக அதிகரித்துள்ளதாகவும், புழல் ஏரியிலிருந்து திறக்கப்பட்டு வரும் உபரி நீர் 300 கன அடியிலிருந்து 500 கன அடியாக அதிகரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்று காலை 8 மணி அளவில் 500 கன அடியாக திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட இருப்பதால் கால்வாய் ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.