Daily Horoscope
✕

”இது நம்ம சென்னை.. நம்ம செஸ்” – ஆவின் பால் பாக்கெட்டுகளில் விளம்பரம்!

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (08:26 IST)
உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில் அதுகுறித்த விளம்பரம் ஆவின் பால் பாக்கெட்டுகளில் இடம் பெற்றுள்ளது.

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. ஜூலை 28ம் தேதி தொடங்கும் இந்த போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக தமிழ்நாடே கோலாகலமாக தயாராகி வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் தனி பாடல் வெளியிட்ட நிலையில், சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் செஸ் பலகை போல அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் செஸ் ஒலிம்பியாட் தொடங்க உள்ள நிலையில் சென்னை முழுவதும் பல பகுதிகளில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன. இன்று ஆவின் பால் பாக்கெட்டுகளிலும் “இது நம்ம சென்னை.. நம்ம செஸ்” என்ற வாசகங்களுடன் செஸ் ஒலிம்பியாட் விளம்பரம் இடம்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு வங்கி கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி திருட்டு!.. சைபர் கிரைம் போலீசார் விசாரணை...

கலெக்டர் புகாரளித்தால் தவெக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை - ராஜ்மோகன் பேட்டி...

நவம்பர் 12ஆ,ம் தேதி வங்கக்கடலில் மீண்டும் புயல்? சென்னைக்கு கனமழை உண்டா?

புத்தக கண்காட்சிகளில் அகல் விளக்கு புத்தகங்களுக்கு தடை.. பபாசி அதிரடி அறிவிப்பு...

சர்ச்சையில் சிக்கும் தவெக எம்.எல்.ஏக்கள் - நாளைக்கு மீட்டிங் போடும் முதல்வர் விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments