Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரசவம் பார்த்த செவிலியர்; கை, கால் முறிந்து பிறந்த குழந்தை! – ஓசூரில் அதிர்ச்சி!

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (10:48 IST)
ஓசூரில் பிரசவத்திற்காக வந்த பெண்ணுக்கு அனுபவமற்ற செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தைக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் வசந்தா என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பிரசவ வலியில் இருந்த நேரம் அங்கு மருத்துவர் இல்லை என கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த செவிலியர்கள் சிலர் சேர்ந்து வசந்தாவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

ALSO READ: நுங்கம்பாக்கத்தில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை!!

வசந்தாவுக்கு குழந்தை பிறந்த நிலையில் செவிலியர்ள் பயிற்சி இல்லாமல் பிரசவம் பார்த்ததால் குழந்தைக்கு கை, கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதை உறவினர்களுக்கு தெரிவிக்காமல் செவிலியர்கள் வசந்தாவை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த போது குழந்தைக்கு கை, கால் எலும்புகள் 3 இடங்களில் முறிந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments