Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் வழக்கு: என்ன காரணம்?

Siva
வியாழன், 14 மார்ச் 2024 (11:44 IST)
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகிய இருவருக்கும் எதிராக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக போதைப்பொருள் விவகாரம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக பாஜக அண்ணாமலை ஆகியோர் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினரை இணைத்து சில கருத்துக்களை பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தன்னைப் பற்றி  அவதூறு கருத்து தெரிவித்ததாக எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் 
 
முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக கிரிமினல் அவதூறு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments