Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின் கட்டண முறைகளை மாற்றியமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.. அதிரடி அறிவிப்பு..!

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2023 (17:01 IST)
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளில் மின் கட்டண முறைகளை மாற்றியமைக்க தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
சூரிய ஒளி சக்தி, மேற்கூரை மின் உற்பத்தி செய்ய மின் இணைப்புகளுக்கு 15% மூலதன மானியம் வழங்கப்படும் என்றும், பருவகால தேவைக்கேற்ப மாறும் தன்மை மின்பளுவைக் கொண்ட தாழ்வழுத்த ஆலைகளின் நிலை கட்டணத்தை குறைத்து கொள்ள சலுகை அளிக்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
மேலும் அனுமதிக்கப்பட்ட மின் பளுவை குறைத்து கொள்ளவும் தேவைப்படும் போது உயர்த்தி கொள்ளவும் அனுமதி அளிக்கப்படும் என்றும், 12 கிலோவாட்டுக்கு குறைவாக உள்ள சிறு , குறு தொழிற்சாலைகளுக்கு வீதப்பட்டியை மாற்றுவது குறித்து பரீசிலிக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பில்.. அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரம்..!

புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடக்கம்.. எந்தெந்த நகரங்களுக்கு? எப்போது?

சென்னையில் நவம்பர் 12 வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!

தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? முக்கிய அறிவிப்பு..!

கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments